பொதுமக்கள் பயன்பாட்டிற்காக… ஒரு வெளிச்ச ஏற்பாடு

ஊரில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான இடங்களில் இரவு நேரங்களில் வெளிச்சம் கிடைக்கும் வகையில், பெருவை இளைஞர்கள் மற்றும் அந்தந்த பகுதி இளைஞர்களின் பங்களிப்புடன் LED விளக்குகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இளைஞர்கள் வழங்கும் நிதிப் பங்களிப்பை கொண்டு தேவையான இடங்களில் LED விளக்குகள் அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

விளக்குகள் அமைத்தல்

இருள் நீங்கி… வெளிச்சம் நிறையட்டும்!

பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் பெருவை துளிர் உதவும் கரங்கள் இயக்கத்தின் மூலம் தேவையான இடங்களில் விளக்குகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கோவில் வளாகங்கள், குளக்கரை மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் கிடைப்பது, அந்தப் பகுதிகளை மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பாக செல்வதற்கும் உதவியாக இருக்கும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட Focus Light

பெருகவாழ்ந்தான் திருகாரியப்பர் அய்யனார் கோவில் குளம் அருகில் 35 அடி உயர Focus Light அமைக்கப்பட்டது.

அதேபோல், பெருகவாழ்ந்தான் வாகை மர பேருந்து நிறுத்தம் பகுதியில் 18 அடி உயர Focus Light அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு பணிகளும் பெருகவாழ்ந்தான் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலுதவியாளர்களின் நன்கொடைப் பங்களிப்புடன், அவர்களின் ஒத்துழைப்போடு தொழில்நுட்ப உதவியாளர்கள் மூலம் அமைக்கப்பட்டன.

பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் இரவு நேரங்களில் தேவையான வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளுக்கு நன்கொடை வழங்கிய பெருகவாழ்ந்தான் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலுதவியாளர்கள் அனைவருக்கும், பெருவை துளிர் உதவும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெளிச்சம் ஒரு வசதி… அனைவருக்கும் ஒரு பயன்!

நம் ஊரில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் தேவையான வெளிச்சத்தை ஏற்படுத்தும் பணிகளை, நம்மால் இயன்ற அளவில் தொடர்ந்து மேற்கொள்வோம்.

இருள் இருக்கும் இடங்களில் வெளிச்சம் ஏற்படுத்துவோம்…
பொதுமக்கள் பயன்பெறும் இடங்களை மேம்படுத்துவோம்!

Scroll to Top