பெருவை துளிர்
உதவும் கரங்கள்
நம் ஊர்… நம் மக்கள்… நம் பொறுப்பு.
ஒன்றிணைந்து செயல்படுவோம்; நம் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து துணை நிற்போம்.
…. இயன்றதை செய்வோம் இல்லாதோர்க்கு ….
நாங்கள் என்ன செய்கிறோம்?
“மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவதும், நம் ஊரின் பொதுநலனுக்காக செயல்படுவதும், மனிதநேயத்துடன் சமூகத்திற்கு பயனுள்ள பணிகளை மேற்கொள்வதும் எங்கள் முக்கிய நோக்கங்களாகும்.”
எங்கள் சேவைகள்
உங்கள் பிறந்த நாளை ஒரு நல்ல நாளாக மாற்றுங்கள்
நான் கொண்டாடும் ஒரு நாள்…
யாரோ ஒருவருக்கு உணவாகட்டும்.
உங்கள் பிறந்தநாள் அல்லது சிறப்பு நாளை, ஒருவரின் பசியை போக்கும் இனிய நாளாக மாற்றுங்கள். உங்கள் நன்கொடையின் மூலம் தேவையானவர்களுக்கு உணவு சென்றடையும்.
நல்ல மாற்றத்திற்காக நம் அனைவருக்குமாக
நம் சமூகத்திற்காக, நம் அனைவருக்குமாக, நல்ல மாற்றத்திற்கான பணிகளில் எங்களால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறோம்.
- மரக்கன்றுகள்
- LED விளக்குகள்
- குளம் மேம்பாடு
- சாலை பாதுகாப்பு
- பொதுஇடங்கள் மேம்பாடு
அவர்களுக்கு நம்மை தேவையான நேரத்தில்... நாம் அருகில் இருப்போம்.
“உதவி தேவைப்படும் நேரத்தில்,
உறவாய் உடன் நிற்போம்.”
வயதானவர்கள் மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு, மருத்துவமனை செல்வது முதல் தேவையான உதவிகளை வழங்குவது வரை, மனிதநேயத்துடன் துணை நிற்கிறோம்.
எங்கள் செயல்பாடுகள்
ஒவ்வொரு உதவியும் ஒரு மாற்றத்தை உருவாக்கும்
உங்கள் ஆதரவு, பலரின் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்கும்.