அன்பும் சேவையும்

திருவிழா மகிழ்ச்சியில்… மக்களுடன் ஒரு சிறிய சேவை!

திருவிழாக்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் நீர், மோர் வழங்குவதுடன், மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகளையும் வழங்கி, அன்பையும் பசுமையையும் பகிர்ந்து கொள்கிறோம்.

திருவிழாக்களிலும் தொடரும் அன்பும் சேவையும்

பெருவை துளிர் உதவும் கரங்கள் இயக்கத்தின் சார்பில், பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு சிறிய சமூக சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயக்கத்தின் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு தொடக்க நிகழ்வுகளின் போது, வெவ்வேறு கோவில் திருவிழாக்களில் நீர் பந்தல் மற்றும் மோர் பந்தல் அமைத்து, திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

மேலும், பசுமையை வளர்க்கும் நோக்கில் மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டு, இயற்கை பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 

பெருகவாழ்ந்தான் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, பங்குனி திருவிழா, பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு கோவில் நிகழ்வுகளிலும், நமது இயக்கத்தின் மூலம் நீர் மோர் பந்தல் அமைத்து சேவை செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கு வரும் மக்களுக்கு வெயிலில் ஒரு சிறிய நிவாரணமாக நீர் மற்றும் மோர் வழங்குவதும், அதனுடன் பசுமையை வளர்க்க மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகளை வழங்குவதும் இந்த சேவைகளின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.

இந்தப் பணிகளில் இயக்கத்தின் நண்பர்கள், இளைஞர்கள், கிராமவாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தங்களால் இயன்ற உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர்.

பசுமையில் ஒரு பங்களிப்பு…
மக்களுடன் தொடர்ந்து ஒரு பயணம்!

இந்தச் சேவைகளுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், இளைஞர்கள், கிராமவாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பெருவை துளிர் உதவும் கரங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள். 

 

இயன்றதை செய்வோம்… இல்லாதோர்க்கு துணையாக இருப்போம்!

Scroll to Top