மருத்துவ உதவி தேவைப்படும் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு,
மருத்துவச் செலவுகள் மற்றும் தேவையான உதவிகளை
வழங்குகிறோம்.

உங்கள் அன்பு.. ஒருவரின் நலமாகட்டும்

மருத்துவ உதவி

மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுடன் நாம் பகிர்ந்த சில மனிதநேய தருணங்கள்

வயது முதிர்வு, உடல்நிலை பாதிப்பு மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமை போன்ற காரணங்களால், பல முதியவர்கள் மருத்துவமனைக்குச் சென்று தங்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.

அத்தகைய மருத்துவ உதவி தேவைப்படும் முதியவர்கள் மற்றும் தேவையுள்ள மக்களை கண்டறிந்து, அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று அவர்களின் மருத்துவத் தேவைகளை அறிந்து வருகிறோம்

மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்களுக்காக, அரசு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் சிறப்பு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து, தேவையுள்ளவர்களை அவர்களது இல்லங்களிலிருந்து அழைத்து வந்து மருத்துவப் பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்கிறோம்.

அவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து, தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், தொடர்ந்து மருத்துவ கவனம் தேவைப்படும் நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடுத்தகட்ட உதவிகள் கிடைக்க வழிகாட்டுகிறோம்.

மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் இருப்பது அவர்களின் தவறல்ல.
வசதி இல்லாததால் ஒருவர் மருத்துவ உதவியை இழக்கக்கூடாது.

அதனால், மருத்துவ உதவி தேவைப்படும் இடத்திற்கே சென்று, அவர்களை அழைத்து வந்து, மருத்துவர்களின் முன்னிலையில் பரிசோதனை செய்து, தேவையான உதவிகளை வழங்குவதே எங்களின் நோக்கம்.

ஒரு முதியவருக்கு மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்துவது என்பது வெறும் ஒரு பயண உதவி அல்ல…
அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் ஒரு முயற்சி.
அவர்களின் குடும்பத்திற்கு ஒரு நம்பிக்கை.
அவர்களின் வாழ்க்கையில் நாம் நீட்டும் ஒரு அன்புக்கரம்.
 

 

அவர்களால் மருத்துவத்தைத் தேடி செல்ல முடியவில்லை என்றால்…
மருத்துவத்தை அவர்களிடம் கொண்டு செல்வோம்.
 

🌳 பெருவை துளிர் உதவும் கரங்கள் ☘️
இயன்றதை செய்வோம்… இல்லாதோர்க்கு!

Scroll to Top